ஏன்! 
வாரியல் குச்சியால் தொட்டால்சட்டென
குறுகிக்  சுருள்கின்றன ரயில் பூச்சிகள் 
மூச்சுக்  காற்றுப் பட்டால் கூட – தலையை
உள்ளிழுத்துக் கொள்கின்றன நத்தைகள்
சருகுகளின் சத்தம் கேட்டால் கூடப்
புடைதேடிப் பொந்துக்குள் விரைகின்றன பாம்புகள்
விரல் நுனி பட்டால் கூடப் பட்டெனச்
சுருக்கிக்  கொள்கின்றன தொட்டாச் சிணுங்கி மரங்கள் 
 

உலக்கையடி பட்டாலும் 
தீயினால்  சுட்டாலும்
மாற்றம் ஏதும் காட்டாமல்
மரத்துப்  போய்விட்டது இந்த
மனித மனம்  
                 - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com