அடி

உள்நாட்டில் சுரண்டி
வெளிநாட்டில் பதுக்கு
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
புறநானூற்றுப் புலவன்
சொன்னதைப்
பிழைபடப்
புரிந்தவன் நீயே!
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
அடுத்த அடி
உனக்குத்தான்
      - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com

                                               திற... பற....


ஒரு பறவையின் பரந்துபட்ட
ஆகாயத்தைப் போல
அகன்று பரந்திருக்கிறது
இந்த ஆச்சர்யமான வாழ்க்கை

ஒரு மீனின் நீந்துதலுக்காய்
காத்திருக்கும்
பரந்த ஆழியைப்போல்
பரந்து கிடக்கிறது இப் பாசவாழ்க்கை

பறக்கவும் நீந்தவும் நேரமற்று
முட்டைக்குள் முடங்கிக் கிடக்கின்றன
இம்மனிதக் குஞ்சுகள்

அகலக் கதவுகளை
அகன்று திறந்துக் காத்திருக்கும்
அழகான வாழ்க்கை முன்
நம்மையே நாம் மூடிக்கொள்கிறோம்
நாகரீகம் ஏதுமற்று

                                             - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com

                                                         முடிகிறது

மடியிலமர்த்திக் கதை சொல்கிறேன்
'ம்' ஒலியோடு தலையாட்டித்
தூங்குகிறது என்சிறு குழந்தை

பொம்மைகளை உண்மைகளாய் நம்பவும்
செப்புச் சாமான்களில் சோறுகறி பொங்கவும்
ஆடைகளற்றுத் தெருவரை போகவும்
பொக்கை வாய் குழிவிழ அழகாகச் சிரிக்கவும்
பிடித்த கரம் நம்பி  விரல் தந்து நடக்கவும்
மண்ணள்ளி மகிழ்வாய் மறைவாய் வைத்துத் தின்னவும்
சுவற்றுப் பரப்பில் சுதந்திரமாய் ஓவியங்கள் வரையவும்
இருளைக் கண்டால் தாயிடம் பதுங்கவும்
பிரணவ் போன்ற குட்டிக்குழந்தைகளால் முடிகிறது
சுள்ளென்று எரிந்து விழுந்து
அடித்துத் துவைக்க மட்டுமே
நம்மால் முடிகிறது.
                               - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com

                                     பதிவுக்காய்...
பௌர்ணமி நடுநிசியில்
தற்கொலை செய்து கொண்ட
சின்னஞ்சிறு பெண்ணாய்
அலையலையாக அக்
கேணியில் மிதக்கிறது
அந்த வெள்ளை நிலா

தூரத்தில் குழு விலங்குகளால்
சிதைக்கப்பட்ட பெண்ணின் கேவல்
எல்லாம் முடிந்தபின்
கூர்க்கா சைக்கிளில்
போய்க் கொண்டிருந்தான்
விசில் ஊதியபடி
தான் வந்து சென்றதைத்
 தெரிவிப்பதற்காக

உயிருக்குப் போராடுபவனைச்
சென்று பார்ப்பது முதல்
அவனது இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்வது வரை
வருகைப் பதிவு தருவதும்
தலைகாட்டித் தெரிவதும்
எந்திரமயமாய்
எல்லோரும் செய்கிறோம்
என்று தணியும்
இந்த வருகைப் பதிவுத்தலைகாட்ட

Blog Archive