என் தாயின்
சின்ன வயிற்றுக்குள்ளும்
சிரமமில்லாமல்தான்
இருந்தேன் .
இன்றோ எதற்கும்
விசாலம் தேடி
விரைகிறேன் .

ஒடுக்கமும்
விரிவும்
உள்ளுக்குள்
உள்ளது
என்பதை
 அறியாமல் ,

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



ஊன்றக் கொடுத்த தடி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி




எழுதாத பேனாக்களையும்
எடுத்தெடுத்து வைத்திருப்பார் 
அப்பா
தொலைபேசி எண் குறிக்கவோ
அவசரமாக ஏதோ எழுதவோ
எடுத்து எழுதினால்
மையற்று  
எழுத்தின் தடம்
மட்டும் தெரியும் .
ஆனாலும் அவற்றைத் தூரப் போட 
அப்பாவுக்கு மனசுவராது
சில நேரங்களில் தேய்ந்துபோன
குட்டைப் பென்சிலைக் கூட
அவர் மாட்டி எழுதிப் பார்த்திருக்கிறேன் .
அது சரி
அடுக்கடுக்கடுக்காய்
 ஆயிரம் பேனாக்களை
வைத்திருக்கும்
பேனாக் கடைக்காரன்
என்ன எழுதுவான் தன் கடைப் பெயரைத்
தவி

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி



வெள்ளையடிப்பு நாட்களில் ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும் சிதறி ஓடிய சிலந்திகளைப் பார்க்கும் போதெல்லாம் மே மாதத்து  மாற்றல் உத்தரவு கண்டு  மூட்டை முடிச்சுகளுடன் மைசூருக்கும்  நாகாலாந்துக்கும் ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா காரணமின்றி நினைவுக்கு வருகிறார் 



அரைத்த சூடு தீரச்
செய்தித்தாளில்
ஆறப்போடுகிற
ரைஸ் மில்காரனாய்
நமை அரைத்துச்
சில நேரம்
ஆறப்போடுகிறது
வாழ்க்கை எனும்
 வட்ட எந்திரம் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி