பறவை செய்யும்

கால மரத்தின் கடைசிச் சருக்காய்

வனத்தில் அலையலையாய் பறந்து

மண்ணில் விழுந்து கொண்டிருக்கிறது

அம் மனிதச் சருகு.


கால மரணங்களின் அடிச்சுவட்டில்

ஆதம் தொடங்கி அனைவரும் மரித்தபின்

மிச்சமிருந்த அவனும் இறந்து போனான்


சிவலோகப் பதவியடைந்தாரென்றோ

வைகுண்டப் பதவியடைந்தாரென்றோ

கர்த்தருக்குள் நித்திரையடைந்தாரென்றோ

வஃபாத்தானார்களென்றோ

விளம்பரம் தர யாருமற்ற

ஈடு செய்ய முடியா இழப்பென்று,
வருந்த வாய்ப்பு மற்று,

தூக்கிப் போக யாருமற்று,

ஈமக் கிரியை செய்ய யாருமற்று

செத்துக் கிடக்கிறான்

அந்தக் கடைசி மனிதன்


ஒரு வேளை பருந்துகள்

அப்பணியைச் செய்யலாம்

ராமன் சடாயுக்குச் செய்த

நன்றிக் காய்
           - முனைவர். ச. மகாதேவன்  


                                                                                 ...108....

எல்லாச்
சாலைகளிலும்
அலறல்
ஒலியுடன்
அலைகின்றன

தலையில்
விளக்கணிந்த
காப்பூர்திகள்

உட்கிடப்பவனுடன்

உடனிருப்போர்

அவனையும்
பரபரப்பான
சாலையையும்

மாறிமாறிப்
பார்த்தபடி
பதற்றத்தோடு

நொடிகளைக்
கடக்கிறார்கள்
உயிரைக்
காக்கும் உந்துதலுடன்
வாகன
வட்டைச் சுழற்றும்
ஓட்டுநரின்
கவலை
வழிவிடாமல்
முன் விரைந்து கடக்கும்
வாகனங்கள்
குறித்துதான்
எதுவுமே
எடக்குதான்
நாம்

பாதிக்கப்
படாமலிருக்கும் வரை...
                          - முனைவர். ச. மகாதேவன்   


இன்று...

தொட்டணைத்து
ஊற மறுக்கின்றன
மணற்கேணிகள்

இருநூறு
அடிதாண்டி துளையிட்ட பின்பும்

பீலி
பெய்யாமலேயே
அச்சிறுகின்றன
சாலையோரத்தில் பேருந்துகள்

கார்பைடு
கல்லுக்குள் இருப்பதால்
கனியிருப்பக்
காய் கவர்ந்துவந்து
அரிசி
டப்பாவுக்குள் வைக்க வேண்டியுள்ளது.

மோப்பக்
குழையும் அனிச்சம் போலன்றி
விருந்துக்கு
வராதே என
விரைவஞ்சலில்
மறுத்தெழுதினாலும்
அதற்குள்
வந்து நிற்கிறான் முகவாட்டம் ஏதுமின்றி.
என்
பிரிய விருந்தினை

ஸ்கேன்
நாடிஃ எக்ஸ்ரே நாடிய பின்தான்
மருத்துவரையே
நாட முடிகிறது

யாகாவாராயினும்

நா
காக்க முடியவில்லை
நா
வீச்சில்தான்
நாடாளுமன்றமே

நடக்கிறது
.

பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்
ஒட்டி
மறைததாயிற்று
              - முனைவர். ச. மகாதேவன்   

                                  செல்லாக்காசு

ஈனஞ்சாமியின்
சந்தன நெற்றியில்
ஒட்டித்
தருமாறு சரகக்கா தந்த
நாலணாத்
துட்டைச் செல்லாதென
யாரால்
சொல்ல முடியும்?

நெல்லையப்பர்
தேரோட்டத்தன்று
தேங்காய்
மிட்டாய் வாங்கிச் சாப்பிடென்று
அப்பத்தா
தந்த நாலணாத் துட்டை
செல்லாதென
யார் சொல்ல முடியும்?

நிறைசூலியாகத்
துள்ளத் துடிக்க இறந்துபோய்
வெள்ளக்கோயில்
மயானத்தில்
எரியூட்டும்
முன் லோகா மதினியின்
கையில்
வைத்துப் பலதாம்பூலமாய் தந்த
நாலணாத்துட்டைச்

செல்லாதென
யாரால் சொல்லமுடியும்?

ரிசர்வ்
வங்கியின்
பொருளாதார
மதிப்பையும் கடந்து
மனிதர்களோடு
விலை மதிப்பே இல்லாத
எத்தனையோ

நாலணாக்கள்
உயர்திணையாகவே
உள்ளுக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே

நாலணா
செல்லாதென்று
நல்ல
நாவால் யாரும் சொல்லற்க

                    - முனைவர். ச. மகாதேவன்

                             நாக பயம்....

ஆதிபயத்தின் அடியொற்றல்களாய்
பாம்புகளைப்
பற்றிய பயம் இன்னுமின்னும்...    
வீட்டுக்குள்
வந்து படமெடுத்த நாகராஜனைக்
கழியால்
அடித்துக் கொல்வதைத்தவிர
வேறென்ன
செய்ய முடியும்?
சர்ப்ப
தோஷமாய் என் சாதகக் கட்டமேறி
குலமறுக்க
நிற்கிறதாம்

வீட்டு
நிலையில் கூட நாகர் செதுக்கி
நாளும்
அர்ச்சித்தாகி விட்டது
அழகு
நாச்சியம்மன் கோவில் நாகருக்கு
பால்
வார்த்து முட்டை வைத்தாகிவிட்டது
சங்கரன்
கோவில் போய்
காளஹாஸ்தி
போய் வெள்ளி நாகர் வாங்கி
உண்டியலில்
போட்டாகி விட்டது.
ஏதும்
பயனற்றுப் போனது
படுக்கையின்
பக்கத்தில்
மனதின்
மையத்தில்
தலையணைக்கு
மேல்
ஐந்து
தலைதூக்கிப் படமெடுத்து நிற்கிறது    
ஒரு
வேளை அதன் புற்றை
புல்டோசரால்
உடைத்து
கட்டிடம்
கட்டிய கோபம்
அதன்
அடி மனதில் ஆறாமலிருக்கலாம்.

ஆதி
மனிதனின்
பாதி
உருவாயிற்றே அது.
கொத்தாமலிருக்கும்
வரை
வணங்க
வேண்டியதுதான்
ஆதித்
தெய்வமாக....
                    - முனைவர். ச. மகாதேவன்  

                                             எழுத்து படும் பாடு

மூடு காலணிகளுடனும்
கழுத்துப் பட்டையுடனும்
கைநிறைய தலையணையளவு
புத்தகங்களுடனும் அவன்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறான்

அறிவியல் புத்தகங்களோடு வந்தான்
போன வாரமே கல்லூரியில் வாங்கிவிட்டேன் என்றேன்.
புதினத்தோடு வந்தான்
படித்துவிட்டேனே என்றேன்.
இன்று அகராதியோடு வந்திருக்கிறான்
என்ன சொல்வதெனத் தெரியாமல்
மனைவியிடம் இல்லைஎனப்பொய்
சொல்லச் சொன்னேன்.

இருந்தும் இல்லாமல் போன நான்
இல்லாமலிருந்தாலும்
இன்றும் வாழும் சி.சு. செல்லப்பாவை
நினைத்துப் பார்த்தேன்

எழுத்து இதழோடு தலைச்சுமையாய்
கல்லூரிகளைத் தேடி அலைந்த
அவரையும் இந்தப்பாடுபடுத்தியிருப்பார்களே!

                                                                         கணியன் கவிதை

உள்நாட்டில் சுரண்டி
வெளி நாட்டில் பதுக்கு
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
புறநானூறு சொன்னதைப்
புரிந்து கொண்டவன் நீயே!


                         
                                   - முனைவர். ச. மகாதேவன்

                                                       நெஞ்சைத் தைத்த நெருஞ்சிமுள்
விஷக் கோடுகளை
விபரீதம் தெரியாமல் கடந்ததால்
கவிழ்ந்து காலமான கரப்பான பூச்சிகளைப்போல்
ஏதேனும் ஒரு கோட்டினைக்
கடந்து காலமாகிறோம் சிறுவன்தில்சனைப்போல்

விசா இல்லாமல் எல்லை கடந்தவனைச்
சுட்டுக் கொன்றதைப் போல்
வாதங்கொட்டை பொறுக்கப் போனவன்
சுட்டுக் கொல்லப் பட்டானே!

வண்ணத்துப் பூச்சியை
வன்முறை சின்னா பின்னமாக்கியது
கெட்டுப் போன எண்ணச்செயலால்
பட்டுப் போனது அந்தப் பட்டுப் பூச்சி

விஷக் கோடுகளை
விளங்கிக் கொள்ள
அனுபவமற்ற அந்தக்
குருத்து கொல்லப்பட்டது
என்றும்
நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள்ளே!

                  
                                            - முனைவர். ச. மகாதேவன்


                                               ....ஏ) மாற்றம்.......


அம்மி கொத்துகிறவர்களை
இயந்திர அரைப்பான்கள்
அரைத்துக் கரைத்துவிட்டன.

சைனா பஜார் சல்லிசு
குடைகள் வந்த பிறகு
குடை ரிப்போ்காரர்களைப்
பார்க்கவே முடிவதில்லை.

 


கலர் கலராய் நைலான் குடங்கள்
வந்தபின்பு சூட்டுக் கோலோடு
பிளாஸ்டிக் வாளி ஒட்டுகிற
முண்டாசு மனிதர்களைப்
பார்க்க முடிவதில்லை.

அடுக்ககப் பல்பொருள் அங்காடிகளில்
குளிர்பதனப் பெட்டிக்குள்
பாக்கெட் மோர் வைக்கப்பட்ட பின்
மூங்கில் கூடையோடு
சுவற்றில் கோட்டுக் கணக்கெழுதி
மோர் விற்றுப்போன
திம்மராஜபுரம் கிருஷ்ணம்மாவை இப்போது
பார்க்க முடிவதில்லை.

பூ விற்பவன் மட்டும்தான்
எங்கள் பாண்டிய வேளாளர்
தெருவில் அவ்வப்போது
தென்படுகிறான்
அவன் வயிற்றில் எப்போது
அடிக்கப்போகிறோமோ தெரியவில்லை

தொழிலாளர்களைப்
படிப்படியாய் பிச்சைக்காரர்களாக்கும்
வித்தை மட்டும் அருமையாய் நடக்கிறது
                                                        
- முனைவர். ச. மகாதேவன்

                                                                    ...பரணி அம்மா....

வைகறை யாமம் துயிலெழுந்து
குளிர்கோர்த்த உணர்வுடனே
நதியில் நீராடத் தாமிரபரணி
நோக்கி நடந்தன கால்கள்.

கரையோர மயானங்களின்
கடைசிச் சாம்பலொடு
ஓழியாது ஓடியது தளரா அத்தண்நதி

தீரத்தீர மண்ணள்ளித் தீண்டியாயிற்று அவளை
சோரத் சோரச் சாக்கடைகள்
கொண்டு சேர்த்தாயிற்று
முட் காடாக்கியாயிற்று.

நதிக்குள் இறங்குகிறேன்....
கண்ணாடித் துண்டுகள்
காலைக் கிழித்துச் சிவக்க வைக்கின்றன.

மலையில் வழிந்து,
மனிதர் தலையில் விழுந்து,
கலையாய் நிலத்தில் படரும்
அவள் உடல் பரப்பெங்கும் படுகுழிகள்

நிசப்தமாய் நீள்கின்றன
அவளின் கதறல்கள்

தடதடத்து மண்ணள்ளும் லாரிகள்
நதிக்கரையில் நுழைகின்றன.
மடியைக் கிழித்து
மண்ணை எடுக்கின்றன
    அந்த அரக்கக் கைகள்

இன்னலின் பின்னலில்
இன்றும் என் பரணியம்மா
என்று தீரும் அவளது சோகம்?

                                     - முனைவர். ச. மகாதேவன்