ஆயுதத்தோடு ஆசி தந்த
ஆயிரத்தா முதல்
விடிகாலைப் பேட்டையிலிருந்து
வந்த பேராச்சி வரை
விழித்திருந்து பதின்முன்று
தசரா சப்பரங்களைக்
கண்குளிரத் தரிசித்தாகி விட்டது
இப்போது
எனக்கிருக்கும்
ஒரே கவலை
நெற்றியில் பூசியதிருநீறு போக
மிச்சமிருப்பதை
என்ன செய்வது என்பது தான்!!!!
0 comments:
Post a Comment