பறவை செய்யும்

கால மரத்தின் கடைசிச் சருக்காய்

வனத்தில் அலையலையாய் பறந்து

மண்ணில் விழுந்து கொண்டிருக்கிறது

அம் மனிதச் சருகு.


கால மரணங்களின் அடிச்சுவட்டில்

ஆதம் தொடங்கி அனைவரும் மரித்தபின்

மிச்சமிருந்த அவனும் இறந்து போனான்


சிவலோகப் பதவியடைந்தாரென்றோ

வைகுண்டப் பதவியடைந்தாரென்றோ

கர்த்தருக்குள் நித்திரையடைந்தாரென்றோ

வஃபாத்தானார்களென்றோ

விளம்பரம் தர யாருமற்ற

ஈடு செய்ய முடியா இழப்பென்று,
வருந்த வாய்ப்பு மற்று,

தூக்கிப் போக யாருமற்று,

ஈமக் கிரியை செய்ய யாருமற்று

செத்துக் கிடக்கிறான்

அந்தக் கடைசி மனிதன்


ஒரு வேளை பருந்துகள்

அப்பணியைச் செய்யலாம்

ராமன் சடாயுக்குச் செய்த

நன்றிக் காய்
           - முனைவர். ச. மகாதேவன்  


                                                                                 ...108....

எல்லாச்
சாலைகளிலும்
அலறல்
ஒலியுடன்
அலைகின்றன

தலையில்
விளக்கணிந்த
காப்பூர்திகள்

உட்கிடப்பவனுடன்

உடனிருப்போர்

அவனையும்
பரபரப்பான
சாலையையும்

மாறிமாறிப்
பார்த்தபடி
பதற்றத்தோடு

நொடிகளைக்
கடக்கிறார்கள்
உயிரைக்
காக்கும் உந்துதலுடன்
வாகன
வட்டைச் சுழற்றும்
ஓட்டுநரின்
கவலை
வழிவிடாமல்
முன் விரைந்து கடக்கும்
வாகனங்கள்
குறித்துதான்
எதுவுமே
எடக்குதான்
நாம்

பாதிக்கப்
படாமலிருக்கும் வரை...
                          - முனைவர். ச. மகாதேவன்   


இன்று...

தொட்டணைத்து
ஊற மறுக்கின்றன
மணற்கேணிகள்

இருநூறு
அடிதாண்டி துளையிட்ட பின்பும்

பீலி
பெய்யாமலேயே
அச்சிறுகின்றன
சாலையோரத்தில் பேருந்துகள்

கார்பைடு
கல்லுக்குள் இருப்பதால்
கனியிருப்பக்
காய் கவர்ந்துவந்து
அரிசி
டப்பாவுக்குள் வைக்க வேண்டியுள்ளது.

மோப்பக்
குழையும் அனிச்சம் போலன்றி
விருந்துக்கு
வராதே என
விரைவஞ்சலில்
மறுத்தெழுதினாலும்
அதற்குள்
வந்து நிற்கிறான் முகவாட்டம் ஏதுமின்றி.
என்
பிரிய விருந்தினை

ஸ்கேன்
நாடிஃ எக்ஸ்ரே நாடிய பின்தான்
மருத்துவரையே
நாட முடிகிறது

யாகாவாராயினும்

நா
காக்க முடியவில்லை
நா
வீச்சில்தான்
நாடாளுமன்றமே

நடக்கிறது
.

பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்
ஒட்டி
மறைததாயிற்று
              - முனைவர். ச. மகாதேவன்   

                                  செல்லாக்காசு

ஈனஞ்சாமியின்
சந்தன நெற்றியில்
ஒட்டித்
தருமாறு சரகக்கா தந்த
நாலணாத்
துட்டைச் செல்லாதென
யாரால்
சொல்ல முடியும்?

நெல்லையப்பர்
தேரோட்டத்தன்று
தேங்காய்
மிட்டாய் வாங்கிச் சாப்பிடென்று
அப்பத்தா
தந்த நாலணாத் துட்டை
செல்லாதென
யார் சொல்ல முடியும்?

நிறைசூலியாகத்
துள்ளத் துடிக்க இறந்துபோய்
வெள்ளக்கோயில்
மயானத்தில்
எரியூட்டும்
முன் லோகா மதினியின்
கையில்
வைத்துப் பலதாம்பூலமாய் தந்த
நாலணாத்துட்டைச்

செல்லாதென
யாரால் சொல்லமுடியும்?

ரிசர்வ்
வங்கியின்
பொருளாதார
மதிப்பையும் கடந்து
மனிதர்களோடு
விலை மதிப்பே இல்லாத
எத்தனையோ

நாலணாக்கள்
உயர்திணையாகவே
உள்ளுக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே

நாலணா
செல்லாதென்று
நல்ல
நாவால் யாரும் சொல்லற்க

                    - முனைவர். ச. மகாதேவன்

                             நாக பயம்....

ஆதிபயத்தின் அடியொற்றல்களாய்
பாம்புகளைப்
பற்றிய பயம் இன்னுமின்னும்...    
வீட்டுக்குள்
வந்து படமெடுத்த நாகராஜனைக்
கழியால்
அடித்துக் கொல்வதைத்தவிர
வேறென்ன
செய்ய முடியும்?
சர்ப்ப
தோஷமாய் என் சாதகக் கட்டமேறி
குலமறுக்க
நிற்கிறதாம்

வீட்டு
நிலையில் கூட நாகர் செதுக்கி
நாளும்
அர்ச்சித்தாகி விட்டது
அழகு
நாச்சியம்மன் கோவில் நாகருக்கு
பால்
வார்த்து முட்டை வைத்தாகிவிட்டது
சங்கரன்
கோவில் போய்
காளஹாஸ்தி
போய் வெள்ளி நாகர் வாங்கி
உண்டியலில்
போட்டாகி விட்டது.
ஏதும்
பயனற்றுப் போனது
படுக்கையின்
பக்கத்தில்
மனதின்
மையத்தில்
தலையணைக்கு
மேல்
ஐந்து
தலைதூக்கிப் படமெடுத்து நிற்கிறது    
ஒரு
வேளை அதன் புற்றை
புல்டோசரால்
உடைத்து
கட்டிடம்
கட்டிய கோபம்
அதன்
அடி மனதில் ஆறாமலிருக்கலாம்.

ஆதி
மனிதனின்
பாதி
உருவாயிற்றே அது.
கொத்தாமலிருக்கும்
வரை
வணங்க
வேண்டியதுதான்
ஆதித்
தெய்வமாக....
                    - முனைவர். ச. மகாதேவன்