குளியல்

          வியர்வையின் ஓவியங்கள்
          திட்டு திட்டாய் என் பனியனில். . .
          என் பற்றாக்குறைகளின் பட்டியலில்
          அதன் ஓட்டைகளும் உண்டு
          முந்தா நாள் குளித்தேனே
           எது போனது என்னிடமிருந்து?
           எத்தனையோ முறை குளித்துப் பார்த்தேன்
           எனதழுக்கு என்னிடமே!


வளவுக் குளியலறைகளில்
வரிசையில் நின்று
தண்ணீர் பிடித்துச் சோப்புத் தேய்த்துத்
திரும்பத் திரும்பக்குளித்தேன்
மன அழுக்கு
அப்படியே இருக்கப்
புற அழுக்குப் போயென்னலாபம்?
ஆகவே…
இனி குளியாமை
குறித்து யாரும்
குற்றம் சொல்ல வேண்டாம்.
                       - முனைவர். ச. மகாதேவன்