அச்சிட்ட வினாக்கள்…


    எதிரே பார்த்ததும்
    ஏனிந்தக் கேள்விகள்?
    இவரைப் பார்த்தால்
    இதனைக் கேட்போமென
    எவரைப் பார்த்தாலும்
    அதே சம்பிரதாயக் கேள்விகள்!



                      விண்ணப்பப் படிவம் மாதிரி
ஏற்கனவே அச்சிட்ட
எதுக்களிக்கும் வினாக்கள்
நல்லா இருக்கீங்களா? என்று
கேட்க வேண்டுமே என்பதற்காகக்
கேட்டானேயொழிய
உள்ளத்தோடு அவன்
உள்ளபடிக் கேட்கவில்லை
நானும் கேட்டிருக்கிறேனே
நான்கைந்து பேரிடம்!

          - முனைவர். ச. மகாதேவன்