ஓட்டம் ….

மின்சேமக்கலனில்
மின்சாரம்
மிச்சமிருக்கிறவரை
ஒன்றின் மீதொன்று
ஊர்ந்து ஓடுகிற
கடிகார முட்களைப் போல
உயிர் மிச்சமிருக்கிறவரை
ஒருவரையொருவர்
காரணமில்லாமல்
கடந்து ஓடித்தானேயாக வேண்டும்.
 
                                                        - முனைவர். ச. மகாதேவன்