தொடர்பு எல்லைக்கு வெளியே…
இப்போதெல்லாம்
உங்கள்
அலைபேசி
அடிக்கடி
அழைக்கிறது
பிடித்த
மனிதரின் அழைப்பென்றால்
பெரிய
சொற்களைப் பொறுக்கி எடுத்துப்பேசிப்
பேருரை
ஆற்றுகிறீர்கள்!
வங்கிச்
சேவை முதல்
இணையத் தேவை
வரை
யாவற்றையும்
உங்கள்
அலைபேசியோடு
இணைத்து
வீட்டீர்கள்
உங்களுடன்
இணையாமலிருப்பது
இருபதாவது
முறையேனும்
நீங்கள்
தெரியாமல் எடுப்பீர்கள் என்ற
தளராத
நம்பிக்கையோடு
மீண்டும்
மீண்டும் முயல்கிறானே
அவனோடு
மட்டும்தான்…
காகிதத்
கப்பலேறிக்
காலக்கடலைக்
கடப்பதாய்
கவிதை
வாசிக்கும் நீங்கள்
அவனது
கருத்தைக் கேட்பதற்குமுன்பே
அநியாயமாக
எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment