ருத்ர மூர்த்தி
ரவுத்திரம் கண்களில் கொப்பளிக்க
அவனும் அவளும் கலந்த
சங்கம தேகத்தோடு
அம்பலத்திலாடுகிறான் சிவன்
அவனது உடுக்கை ஒலியில்
அண்டங்கள் பொடிபடுகின்றன
அவனது பாத பங்கயங்களில்
பந்தாடப்படுகின்றன நவகோள்களும்
அவனருகில் ஒலிக்கும் பிரணவப்பேரொலி
செவிப்பறைகளில் ரீங்காரமிடுகிறது
பஞ்ச சபைகளும் பதறுகின்றன – அவனது
ஆட்டமும் ஓட்டமும் தாங்காமல்
இனித்தமுடைய அவன் பொற்பாதங்களில்
உருண்டது ருத்ர பூமி அங்குமிங்கும்
அப்பொது…
குழந்தை அழுகுரல் அவனை
நிலைகுலைய வைத்தது
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
திகைத்தான் ஒரு வினாடி
அப்போதே ஈசன் - தாய்ப்பாச
நேசனாய் தனத்தோடு மாறினான்
சக்தியும் உள்ளாளே சரிபாதியாய்
இன்னொரு சம்பந்தன்
இருக்கலாமல்லவா என்றாள்
அகிலாண்ட நாயகி.
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
0 comments:
Post a Comment