கானகத்தின் காரிருளுக்குள் நுழைந்து
பெருவழியில் ஏறி வெற்றுக்காலால் நடக்கிறேன்
யானைகள் நடந்த பாதை முன் நீள…
யாருமற்ற தனிமைத் தவிப்பில் கடக்கிறேன்

வழியில் அப்பும் அட்டைகள் குறித்தும்
தூரத்தில் கேட்கும் பிளிறல்கள் குறித்தும்
சற்றும் பயமில்லை.

கொட்டும் மழையில்
வழுக்குகின்ற பாதங்களும்...

கொஞ்சிக் குலவுகின்றன
இணை பிரியா நாகங்கள்
அவை புணரும் நேரத்தில்
மஞ்சள் துணி போர்த்தி ஆசீர்வதித்தால்
நாகரத்தினம் கக்குமென்று
அப்பா சொன்ன கதை அப்போது
நினைவில் மிதந்தது

பொருளுக்கு ஆசை பட்டபின்
பயணத்தின் பெயரும் பணம்தானே!

அப்போது
ஆலம் விழுதுகள் கூட
நாகமாய் தெரிந்தது.