அவரவர்
 அவனுக்குச் சொன்ன கவிதை
 உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை
        
                                                               - முனைவர். ச. மகாதேவன்