மகாபாரதி
* மரியாதைக்குரிய மகாபாரதியே! சீக்குப்பிடித்த சிந்தனைகளின்
போக்குப் பிடிக்காமல்
முதுகெலும்போடு நம் தாயகத்தை
முன்னேற்றத்துடித்த எங்கள்
பிரபஞ்சப் பிதாமகனே!
* லஞ்சமும் வஞ்சமும் என்
தேச மஞ்சத்தில் சயனித்தபோது
மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சுப் பேசாத மக்களுக்காய்
காகிதத்தில் ஆயுதம் செய்து
போராடிய புறநானூற்று போர்க்கவிஞனே!
* தோளில் தொங்கும் தோல்பை மாதிரி
தோல்வியில் தொங்கிக் கொண்டிருந்த
என் தேச இந்தியனை நோக்கி
” இரணப்பட்டுப் போனவனே!
சினப்படப்பா சில காலம்..
குணப்படட்டும் நம் தேசம்’
என்று ரௌத்திரம் பழகச் சொன்னவனே!
* யுகமே கண்ணீரில் மிதந்தபோதும்
* மகா பாரதியே!
* மரியாதைக்குரிய மகாபாரதியே! சீக்குப்பிடித்த சிந்தனைகளின்
முதுகெலும்போடு நம் தாயகத்தை
முன்னேற்றத்துடித்த எங்கள்
பிரபஞ்சப் பிதாமகனே!
* லஞ்சமும் வஞ்சமும் என்
தேச மஞ்சத்தில் சயனித்தபோது
மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சுப் பேசாத மக்களுக்காய்
காகிதத்தில் ஆயுதம் செய்து
போராடிய புறநானூற்று போர்க்கவிஞனே!
* தோளில் தொங்கும் தோல்பை மாதிரி
தோல்வியில் தொங்கிக் கொண்டிருந்த
என் தேச இந்தியனை நோக்கி
” இரணப்பட்டுப் போனவனே!
சினப்படப்பா சில காலம்..
குணப்படட்டும் நம் தேசம்’
என்று ரௌத்திரம் பழகச் சொன்னவனே!
* யுகமே கண்ணீரில் மிதந்தபோதும்
உன் முகங்கள் நெருப்பை உமிழ்ந்தன
விடுதலை விறகு வாங்கி
அடிமன அடுப்பில் அக்கினிக்குஞ்சால்
சுட்டவனே!
வெந்து தணிந்தது இக்காடு
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ?
* மகா பாரதியே!
இப்போதும் உன் எட்டயபுரம் இருக்கிறது…
உன் காணி நிலத்தில்
’ரியல எஸ்டேட்’ பலகைகள்.
இப்போதும் உன் பாரதம் இருக்கிறது
சுரண்டலுக்கு மிச்சமற்று…
அதற்கு மத்தியிலும்
நம்பிக்கையோடு நானிருக்கிறேன்
காரணம்...
உன் கவிதைகள் மிச்சமிருக்கின்றனவே!
0 comments:
Post a Comment