skip to main |
skip to sidebar
செம்புலச் செய்தி
செம்புலமெல்லாம்
செங்கற் சூளையாயிற்று
பெயல் நீரையெல்லாம்
புட்டியிலடைத்து
விற்றாயிற்று
இதில் இனி…
அன்புடை நெஞ்சமாவது
உறவு கலப்பதாவது!
ஒழுங்கு மரியாதையாக
ஜதாகக்காரன்
பேச்சைக் கேட்டு
அப்பா பார்த்த பெண்ணைக்
கட்டியழு காலம் முழுக்க
- முனைவர். ச. மகாதேவன்
1 comments:
//ஒழுங்கு மரியாதையாக
ஜதாகக்காரன்
பேச்சைக் கேட்டு
அம்மா பார்த்த பையனைக்
கட்டியழு காலம் முழுக்க//
இப்படியும் கொள்ளலாம் அல்லவா :-/
Post a Comment